சட்டப்பேரவைக்கு 2வது நாளாக கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்!

 
admk

அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு இரண்டாவது நாளாக கருப்பு சட்டை அணிந்து வந்தனர். 

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு துறை சார்பாகவும் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் பேச அதிமுக உறுப்பினர்களை சபாநாயகர் அனுமதிக்கவில்லை என அதிமுக உறுப்பினர்கள்  நேற்று கருப்பு உடை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். 

இந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு இரண்டாவது நாளாக கருப்பு சட்டை அணிந்து வந்தனர். சட்டப்பேரவைக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் 2வது நாளாக கருப்பு சட்டை அணிந்து வருகை தந்தனர். சட்டப்பேரவையில் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.