சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

 
eps eps

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படது. காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட்டை நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. எத்தனை தடைகள் வந்தாலும் சமநிலை தவறாது, நம் உரிமைகளைக் காக்கும் முதலமைச்சரை நாடே பாராட்டிக்கொண்டு இருக்கிறது.  இருமொழிக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதால் சர்வதேச அளவில் தமிழர்கள் தடம் பதிக்கின்றனர். மகளிருக்கு வாக்குரிமை வழங்கிய சென்னை மாகாணத்தின் வழியில் அவர்களுக்கு சொத்துரிமை வழங்கியது தமிழ்நாடு; இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. பன்முக வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது என கூறினார். 

இந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு தொடர்பாகவும், வெளிவந்துள்ள ஊழல் தொடர்பாகவும் பேச அனுமதி மறுப்பு என கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.