சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக உறுப்பினர்கள்!

பேரவையில் அதிமுகவினர் பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு துறை சார்பாகவும் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். டாஸ்மாக்_ஊழல் பின்னணியில் உள்ள #அந்த_தியாகி_யார் ? என்ற கேள்வியை பேட்ஜாக அணிந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் அதிமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இது தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் பேச முயன்ற போது அனுமதி அளிக்கப்படாததால் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதோடு, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், பேரவையில் அதிமுகவினர் பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.சட்டப்பேரவைக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்தனர்.