அதிமுக எம்.எல்.ஏ திடீர் மரணம்!

 
ச் ச்

தனியார் மருத்துவமனையில் உடல் நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த அதிமுக எம். எல். ஏ. அமுல் கந்தசாமி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பணியாற்றி வந்தவர் கந்தாசாமி (60). தனி தொகுதியான வால்பாறை சட்டமன்ற தொகுதில் 2021 ஆம் ஆண்டு அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்றவர். வால்பாறை சட்டமன்ற உறுப்பினராகவும், அதிமுக கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளருமாக TK அமுல் கந்தசாமி பணியாற்றி வந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், அதிமுக கட்சியில் தீவிரமாக களப்பணியாற்றி வந்தார். இந்த நிலையிலே, உடல் உறுப்பு தொற்றினால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தரப்பட்டு வெண்டிலேட்டரில் கண்காணிக்கப்பட்டு வந்தார்.

இந்த நிலையில், அவர் உடல் குறித்து எடப்பாடி பழனிச்சாமி நலம் விசாரித்து சென்றிருக்கின்றார். உடல் உபாதைகளுக்கு தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வந்த நிலையில், திடீரென அவர் காலமானார். தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், வால்பாறை சட்டமன்ற தொகுதி மக்கள், நண்பர்கள், குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். இவரின் உடல் சொந்த ஊரான அன்னூரில் நல்லடக்கம் செய்கின்றனர்