பேரவையில் இன்றும் அமளி - அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!

 
tt

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கியது. பேரவை தொடங்கியதுமே இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர் அப்பாவு.

tt

கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என பேரவை விதிகளை சபாநாயகர் சுட்டிக்காட்டிய பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

appavu

8 நிமிடங்கள் அவையை நடக்கவிடாமல் செய்து இருக்கிறீர்கள். இருக்கையில் அமரவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன் என்று சபாநாயகர் கூறிய நிலையில் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.