’கப்பு எங்களுக்குதான் பிகிலு’ விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுக

2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் தங்களுக்குதான் வெற்றி என அதிமுகவினர் சுவரொட்டி மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வர உள்ளதாக தகவல் பரவிவரும் நிலையில், சென்னையில் நடந்த லியோ திரைப்பட வெற்றி விழாவில் உரையாற்றிய நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலில் கால்பதிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் 2026ல் கப்பு முக்கியம் பிகிலு, அதனை நீங்கள்தான் பார்த்து கொள்ள வேண்டும் என அவரது ஸ்டைலில் ரசிகர்களை பார்த்து கேட்டுக்கொண்டார்.
நடிகர் விஜய்க்கு பதிலடிக்கும் கொடுக்கும் வகையில் அதிமுகவினர், சுவரொட்டி ஒட்டியுள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகம் முன்பு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், 2024,2026 தேர்தலில் கப்பு தங்களுக்குதான் பிகிலு... என அதிமுக மருத்துவரணி இணைச்செயலாளர் சரவணன் பெயரில் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கிரிக்கெட் உடையில், தொப்பி அணிந்து கிரிக்கெட் மட்டையை கையில் ஏந்தியவாறு இருக்கிறார்.