இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - அதிமுக நிர்வாகி கைது
Jan 30, 2025, 13:47 IST1738225054959

சென்னை அடுத்த படப்பையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
குன்றத்தூர் ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளராக உள்ள பொன்னம்பலம், தன்னுடைய வாடகை வீட்டில் குடியிருந்த பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால், பொன்னம்பலத்தை துடைப்பம் கொண்டு அப்பெண்கள் அடித்து தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரில், விசாரித்த போலீசார் பொன்னம்பலத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குன்றத்தூர் ஒன்றிய எம்ஜிஆர் அணி இணை செயலாளர் பொன்னம்பலம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை அளித்த அதிமுக நிர்வாகியை பெண்கள் துடைப்பத்தால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.