அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள முக்கிய தீர்மானம்
முதல்முறையாக ஒரே அரங்கத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசைன் தலைமையில் தொடங்கியது. ஒன்றரை ஆண்டுகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு கூடியுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் மோதல் வெடித்த நிலையில், உட்கட்சி பிரச்சனைக்கு கூட்டத்தில் தீர்வுக்காண முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் 10 பேர் கொண்ட கள ஆய்வு குழுவினர் சமர்பித்த ஆய்வு அறிக்கை குறித்தும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
சென்னை வானகரத்தில் நடைபெறும் பொதுக்குழுவில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு அளிக்கப்படும் என தீர்மானம் கொண்டுவர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.