அமித்ஷாவுடன் அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூட்டணி பேச்சுவார்த்தை

 
அம்பேத்கரை விமர்சித்த  அமித்ஷா- வாயை திறக்காத எடப்பாடி! பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க திட்டமா?

சென்னை வரும் அமித்ஷாவை, அதிமுக முக்கிய நிர்வாகிகள் சந்தித்து கூட்டணி குறித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரண்டு நாள் பயணமாக நாளை  (ஏப்.10) சென்னை வருகிறார். நாளை இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையம் வரும் அமித்ஷா, ITC கிராண்ட் சோலா ஹோட்டலில் தங்குகிறார். நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை அமித்ஷா சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 2026 தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  தமிழக பாஜக தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், அமித்ஷா வருகை முக்கியத்துவம் வாய்ந்த‌தாக உள்ளது.

இந்நிலையில் அமித்ஷாவை நாளை மறுநாள் முக்கிய அரசியல் தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர். 5 நாட்கள் பேரவைக்கு விடுமுறை விடப்பட்டுள்ள போதும் சென்னையிலேயே இருக்குமாறு முக்கிய நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சென்னையிலேயே உள்ளனர். செங்கோட்டையன், தங்கமணி தவிர மற்ற அதிமுக முக்கிய நிர்வாகிகள் சென்னையிலேயே உள்ளனர்