“குளியலறைக்குள் சென்று கைது செய்வதா?”- கே.பி.முனுசாமி கண்டனம்
எதிர்க்கட்சி தலைவரை கைது செய்யும் அளவிற்கு அதிகாரத்தை முதலமைச்சர் தவறாக பயன்படுத்துகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, “எதிர்க்கட்சி தலைவர் உடயநிதி ஸ்டாலினை கைது செய்யும் அளவிற்கு அதிகாரத்தை முதலமைச்சர் தவறாக பயன்படுத்துகிறார். எதிர்க்கட்சிகளை அடக்கும் வகையிலும், எந்த வகையிலும் செயல்படக்கூடாது என்று பயமுறுத்தும் வகையிலும் முதலமைச்சர் செயல்படுகிறார். உதயநிதி பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதே சமயம் அவரின் கைது எதிர்க்கட்சியினர் மீதான அரசின் அடக்குமுறை. அதில் சந்தேகம் இல்லை. எதிர்க்கட்சியினரை பயமுறுத்துவதற்காகவே அரசு இதை செய்துள்ளது அரசு. குளியல் அறைக்கு சென்று கைது செய்தது அடக்குமுறை” என்றார்.
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி, ''ஜூலை மாதத்தில் 42 டிஎம்சி தண்ணீர் வந்து இருக்கணும், ஆனால் இன்னைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இது பற்றி இன்னைக்கு இருக்கக்கூடிய முதல்வர் வாய் திறந்து பேசுகிறாரா? பேச மறுக்கிறார். அவர் இருக்கக்கூடிய கவலை என்ன? திமுக மீது என்ன பொய் வழக்கு போடலாம். என்ன பொய் கேஸ் போடலாம்'' என தெரிவித்தார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினர், ''திரிஷா… திரிஷா...'' என கோஷம் எழுப்பினர். உடனே உதயநிதி, ''எங்க தண்ணீ வருகிறதோ இல்லை. அங்கே தண்ணீ வரணும், நான் காவிரியை சொன்னேன்'' என்றார். திரிஷா, திரிஷா என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறிய உடனே உதயநிதி இவ்வாறு பேசியது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

