“நோயாளி இல்லா ஆம்புலன்ஸை செல்ல வைத்து கலவரத்தை ஏற்படுத்த நினைப்பது சின்ன புத்தி”- கே.சி.வீரமணி

 
kc veeramani

தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள, Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள எங்கள் கழகப் பொதுச் செயலாளரின் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் - எழுச்சிப் பயணத்தில் அற்ப இடையூறுகளை ஏற்படுத்தி குழப்பத்தை விளைவிக்க முயலும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

DVAC searches at premises linked to former AIADMK minister, party cries  'political vendetta' | Chennai News - The Indian Express

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக்கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரச்சார எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். மக்கள் கடல் அலைபோல் கூட்டம் கூட்டமாக இந்த எழுச்சிப் பயணத்தில் கலந்துகொண்டு பேராதரவு அளித்து வருகின்றனர். இரவு நெடுநேரம் ஆனாலும் கூட்டம் முடித்து திரும்பி வரும் வழியில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக ஆர்ப்பரித்து நிற்கின்றனர். இதைக்கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத திமுக ஆட்சியாளர்கள் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆரம்ப கட்டத்தில் மின்சாரத்தை நிறுத்துவது; போக்குவரத்தை சீர்செய்யாமல், உரிய முறையான அனுமதி பெற்றிருந்தும்கூட காவல் துறையினரின் ஒத்துழைப்பைக் குறைப்பது போன்ற இடையூறுகளை தொடர்ச்சியாக செய்து வந்த நிலையில், தற்போது மக்களின் இன்னுயிரை காக்கக்கூடிய ஆம்புலன்சை, நோயாளிகள் இல்லாத நிலையிலும் மக்கள் கூட்டத்திற்கு இடையே செல்லவிட்டு, புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணத்தை சிதைப்பதற்கு தவறாகப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு முறையான செயல் அல்ல. இதுபோல், பல இடங்களில் எங்கள் கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் பேசும்போது, கூட்டத்தினரிடையே ஆம்புலன்ஸ் வருவதும், அச்சமயங்களில் கழகப் பொதுச் செயலாளர் தமது உரையை நிறுத்திவிட்டு ஆம்புலன்சுக்கு வழிவிடுங்கள் என்று ஒவ்வொரு முறையும் அறிவுறுத்துவதும் அனைவரும் அறிந்ததே. வெளிவந்துள்ளது. இந்நிகழ்வுகள் ஊடகங்களிலும் ஆனால் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தின்போது வந்த ஆம்புலன்சில், நோயாளிகளோ, அடிபட்டவர்களோ யாரும் இல்லாத நிலையில், எங்கள் கழகப் பொதுச் செயலாளர் அவர்கள், அந்த ஆம்புலன்சில் நோயாளிகள் யாராவது இருக்கிறார்களா என்று பார்க்கச் சொன்னார். 

அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

அதன்பேரில், ஒருசில கழகத் தொண்டர்கள் விசாரித்தபோது, ‘அந்த ஆம்புலன்ஸ் நமது கூட்டத்தைக் கலைக்க வேண்டும் என்று திட்டமிட்டு வந்துள்ளது’ என்ற தகவல் கிடைத்த பிறகுதான், எங்கள் கழகப் பொதுச் செயலாளர், அவர்களை கடுமையாக எச்சரித்ததோடு, இதுபோன்று திட்டமிட்டு தவறு இதுபோன்று திட்டமிட்டு தவறு செய்பவர்கள் மீது காவல் துறையிடம் புகார் அளிக்குமாறு தெரிவித்தார். எங்கள் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் வீர உரை ஆற்றும் அதே நேரத்தில், கடல் போல் கூடியிருக்கும் மக்கள் கூட்டத்திற்கிடையே, அந்த மக்களை இருகூறாக பிளப்பது போலவும், அங்கு கூடியிருக்கும் மக்கள் மீது மோதி, அவர்களை ஆபத்திற்குள்ளாக்குவது போலவும், அங்கு அந்த ஆம்புலன்ஸ்களை அனுப்புவது போன்ற சிறுபிள்ளைத்தனமான செயலை இந்த திமுக ஆட்சியார்கள் தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (18.8.2025), அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே வேகமாக வந்த ஆம்புலன்சில் நோயாளியோ அல்லது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் எவருமே இல்லாமல், முறையான சீருடை அணியாத ஒரு ஓட்டுநர், அதிவேகமாக Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் எங்கள் கழகப் பொதுச் செயலாளர் சிறப்புப் பேருரை ஆற்றிவரும் கூட்டத்திற்கு இடையே செல்வது என்பது கவலைக்குரியது. வாகனங்கள் செல்வதற்கு மாற்று வழி இருந்தும்கூட, காவல் துறையினர் அதுகுறித்து கவலைகொள்ளாமல், திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்திற்கு இடையே, நோயாளி இல்லா ஆம்புலன்ஸை செல்ல வைத்து, கலவரத்தை ஏற்படுத்த நினைப்பது ஆட்சியாளர்களின் சின்ன புத்தியினைத்தான் காட்டுகிறது. இதை, திட்டமிட்ட சதி என்றுதான் சொல்ல வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.