“செங்கோட்டையன் இன்று தவெகவில் அவமானப்பட்டுக் கொண்டிருக்கிறார்”- கே.சி.பழனிசாமி
செங்கோட்டையன் அதிமுகவில் ஒற்றுமைக்காக தான் வலியுறுத்தினார். ஆனால் இன்றைக்கு அது நடந்து கொண்டுதான் இருக்கிறது என அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கே.சி.பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “புறக்கணிக்கப்படுகிறாரா செங்கோட்டையன்? த.வெ.கவில் இணையும் பொழுது ஆனந்த் அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருந்தார் செங்கோட்டையன், நேற்றைய கூட்டங்களில் கூட ஆதவ் க்கு அடுத்து செங்கோட்டையன் இருந்தார். திரு ஆனந்த் நீண்ட காலமாக விஜய்யின் ரசிகர் மன்றத்தில் இருந்தவர் ஆனால் ஆதவ் திமுகவில் இருந்தார், அதன்பின் விசிகவிற்கு சென்று அங்கிருந்து வெளியேட்டறப்பட்டு தவெகவிற்கு வந்துருக்கிறார். செங்கோட்டையன் அவர்களின் அனுபவத்தை விட ஆதவ் அர்ஜுனாவின் வயது குறைவாக தான் இருக்கும். ஆனால் இன்று ஆதவ்க்கு அடுத்த நிலையில் இருந்து அரசியல் செய்யும் சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.
செங்கோட்டையன் அதிமுகவில் ஒற்றுமைக்காக தான் வலியுறுத்தினார். ஆனால் இன்றைக்கு அது நடந்து கொண்டுதான் இருக்கிறது, பொறுமை இல்லாத காரணத்தினால் இன்று தவெக வில் அவமானப்பட்டுக் கொண்டிருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


