அதிமுக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறை இருக்காதா?- கடம்பூர் ராஜூ பதில்

 
“எஸ்.வி.சேகர் நன்றி மறந்தவர்” : அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம்!

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலையத்துறையே இருக்காது என்ற நயினார் நாகேந்திரன் கருத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பதில் அளித்துள்ளார்.

கடம்பூர் ராஜூ


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நெற்கட்டும் செவ்வல் பகுதியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவர் மணிமண்டபத்தில் அவரது 310 வது பிறந்த நாளை முன்னிட்டு பூலித்தேவர் உருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


அதன்பின் நடைபெற்ற செய்தியாளர்களை சந்தித்த கடம்பூர் ராஜு, “சுதந்திர போராட்ட மாவீரர் நிற்கட்டும் செவலில் மாவீரராக இருந்த பூலி தேவருக்கு 310 வது பிறந்தநாள் விழா. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலையத்துறையே இருக்காது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது. தேர்தல் நேரம் வருவதால் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். அது அவருடைய கருத்து. பூலித்தேவனுக்கு சென்னையில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பூலித்தேவர் கோவிலுக்குள் மறைந்தார் என வரலாறு. அங்கேயும் சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

பிரிந்திருக்கும் அதிமுக தொண்டர்கள் இணைய வேண்டும் என சசிகலா மற்றும் ஓபிஎஸ் கருத்து தெரிவித்த நிலையில், அது குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து புறப்பட்டுச் சென்றார் அமைச்சர் கடம்பூர் ராஜு.