“உசுப்பேத்தி விட்டுட்டு உம்முனும், கடுப்பேத்தி விட்டுட்டு கம்முனும் இருக்காதிங்க Bro!”- ஜெயக்குமார்
மாணவர்களின் நலன் கருதி குரூப் 1 காலி பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில், “*2026 ல் வெறும் 26 மட்டுமே* தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் 2026 - க்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெறும் 26 காலி பணியிடங்கள் மட்டுமே இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது போட்டி தேர்விற்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மனதளவில் மிகப்பெரிய சோர்வை உண்டாக்கும். இதுவரை தமிழ்நாட்டில், அரசு போட்டித் தேர்வு வரலாற்றிலேயே அதிக காலிப்பணியிடங்களை அறிவித்து நிரப்பியது நான் மனிதவளத்துறை அமைச்சராக இருந்த அம்மா ஆட்சியில் தான்.,
தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் 67,529 பேரும், இதர துறைகளில் 1,68,306 என மொத்தம் 2,35,835 அரசு பணி வழங்கப்பட்டது. மேலும் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு 20% முன்னுரிமையும், மாற்று திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு உயர்த்தி வழங்கியதும் அம்மா அரசில் தான்.எனவே, இன்றைய கவர்ச்சி மாடல் அரசு, மாணவர்களின் நலன் கருதி காலி பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். *உசுப்பேத்தி விட்டுட்டு உம்முனும், கடுப்பேத்தி விட்டுட்டு கம்முனும் இருக்காதிங்க Bro!!*” எனக் குறி்பிட்டுள்ளார்.

