டங்ஸ்டனுக்கு எதிராக இறுதி வரை உறுதியாக உரக்கமாக குரல் கொடுத்தது அதிமுகவே- ஜெயக்குமார்

 
jayakumar

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக இறுதி வரை உறுதியாக உரக்கமாக குரல் கொடுத்தது அரிட்டாபட்டி மக்களும்-அதிமுகவும் மட்டுமே என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

jayakumar

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில், “டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கொண்டு வந்தது பாஜக அரசு! அனுமதியும் ஆதரவும் அளித்தது திமுக அரசு! மக்களின் எதிர்ப்பு காரணமாக பின்னாளில் எதிர்ப்பது போல நாடகமாடினார் ஸ்டாலின்! சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடியாரும்-சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் 'உயிரைக் கொடுத்தேனும் மேலூரை மீட்போம்' என்று முழக்கமிட்டனர்!


அப்போது அரசின் சட்டமன்ற தீர்மானத்தின் போது வெளிநடப்பு செய்தது பாஜக! திட்டத்தையும் கொண்டு வந்து ரத்து செய்வதும் போன்ற நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்! எனவே இறுதி வரை உறுதியாக உரக்கமாக குரல் கொடுத்தது அரிட்டாபட்டி மக்களும்-அதிமுகவும் மட்டுமே!!! அல்லும் பகலும் நின்று வென்றுள்ள அத்துனை கிராம மக்களுக்கும்-விவசாயிகளுக்கும் வாழ்த்துக்களும் பெருநன்றியும்!!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.