அமெரிக்காவில் உள்ள ஸ்டாலினுக்கு மீனவர் வேதனை புரியவில்லையா?- ஜெயக்குமார்
இனவெறி கொண்ட இலங்கை கடற்படை தமிழக மீனவர்களின் படகு மீது மோதி நடுக்கடலில் மீனவர்களை தத்தளிக்க விட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு, “இனவெறி கொண்ட இலங்கை கடற்படை தமிழக மீனவர்களின் படகு மீது மோதி நடுக்கடலில் மீனவர்களை தத்தளிக்க விட்டுள்ளனர்! மானமில்லாமல் மன்னராட்சிப் போல் மகன் கையில் தமிழ்நாட்டை விளையாட்டுப் பொருளாக கொடுத்து விட்டு அமெரிக்காவில் அடைக்கலம் அடைந்துள்ள பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மீனவர் வேதனை புரியவில்லையா? தெரியவில்லையா? பாஜக அரசு தனக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைகளுக்கும் சம்பந்தம் இல்லாதது போலவும் ஆந்திரா,பிகார்,குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் மட்டும் தான் இந்தியா எனவும் எண்ணி ஆட்சி செய்கிறது.
இனவெறி கொண்ட இலங்கை கடற்படை தமிழக மீனவர்களின் படகு மீது மோதி நடுக்கடலில் மீனவர்களை தத்தளிக்க விட்டுள்ளனர்!
— DJayakumar (@djayakumaroffcl) September 12, 2024
மானமில்லாமல் மன்னராட்சிப் போல் மகன் கையில் தமிழ்நாட்டை விளையாட்டுப் பொருளாக கொடுத்து விட்டு அமெரிக்காவில் அடைக்கலம் அடைந்துள்ள பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மீனவர் வேதனை… pic.twitter.com/ipn7aJteOB
கடந்த பத்தாண்டில் இல்லாத அளவிற்கு 2024-ஆம் ஆண்டில் அதிகளவு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். கடல் நடுவே மீனவர்களுக்கு கடும் துன்புறுத்தல்கள் தொடர்கதையாகி உள்ளது. இனியும் பாஜக-திமுக அரசுகள் மெளனம் சாதிப்பது மீனவர்களுக்கு செய்யும் பெரும் துரோகம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.