திமுகவை அனுசரித்தால் 'Promotion'! எதிர்த்தால் 'Suspension'-ஆ?: ஜெயக்குமார்

 
jayakumar

வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் அன்பரசன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக கருத்து பதிவிடப்பட்டிருந்த கருத்து ஒன்றுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கருத்து பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் காவலர் அன்பரசனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “திமுகவை அனுசரித்தால் 'Promotion'! எதிர்த்தால் 'Suspension'-ஆ? வேலூரில் மதிவாணன் என்ற காவலர்,அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் முகநூலில் அமைச்சருடன் ஞானசேகரன் இருக்கும் ஒரு பதிவிற்கு கீழ் கமெண்டில் "மானங்கெட்ட திமுக அரசு" என பதிவிட்டுள்ளார்.


அதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார். எங்கள் ஆட்சியை விமர்சித்தால் இது தான் பதில் என எச்சரிக்கிறதா திமுக அரசு?கடின உழைப்பால் காக்கி சட்டை அணிந்த அந்த காவலரின் நேர்மையையும்-கருத்து சுதந்திரத்தையும் பிடுங்கியுள்ளார் திறனற்ற திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின்! இந்த ஆணவப் போக்கு தான் திமுகவின் அழிவின் ஆரம்பம்! காவலரின் நீக்கம் கடுமையான கண்டனத்திற்குரியது!” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.