"தில் இருக்கா, திராணி இருக்கா, ஒரு ****** உம் கிடையாது" என அநாகரீக பேச்சு- விஜய்க்கு ஜெயக்குமார் கண்டனம்
மீண்டும், மீண்டும் தனது தவறை உணராமல் காவல்துறை மீது பழி போடுவது, பஞ்ச் டயலாக் அடிப்பது, "தில் இருக்கா, திராணி இருக்கா, ஒரு ****** உம் கிடையாது" என்று அநாகரீகமாக பேசுவது போன்ற தனது Trademark பேச்சுக்களையும் வெளிப்படுத்தியுள்ளார் முதல்வர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரூர் சென்றுள்ள முதல்வர், வழக்கம் போல தன் வசன கர்த்தா குடுத்த Script ஐ முழங்கி தள்ளியுள்ளார்.
— DJayakumar (@djayakumaroffcl) July 10, 2026
என் நெஞ்சில் நீங்காமல் இருக்கும் கரூர் மக்களை சந்திக்க போகிறேன் என்று சொன்ன முதல்வர், உண்மையில் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யவே கரூர் சென்றிருக்கிறார். மேலும் ஆட்சிக்கு வந்தால்… pic.twitter.com/TM3MLvOaE2
கரூர் சென்றுள்ள முதல்வர், வழக்கம் போல தன் வசன கர்த்தா குடுத்த Script ஐ முழங்கி தள்ளியுள்ளார்.
— DJayakumar (@djayakumaroffcl) July 10, 2026
என் நெஞ்சில் நீங்காமல் இருக்கும் கரூர் மக்களை சந்திக்க போகிறேன் என்று சொன்ன முதல்வர், உண்மையில் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யவே கரூர் சென்றிருக்கிறார். மேலும் ஆட்சிக்கு வந்தால்… pic.twitter.com/TM3MLvOaE2
இதுதொடர்பாக ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில், “கரூர் சென்றுள்ள முதல்வர், வழக்கம் போல தன் வசன கர்த்தா குடுத்த Script ஐ முழங்கி தள்ளியுள்ளார். என் நெஞ்சில் நீங்காமல் இருக்கும் கரூர் மக்களை சந்திக்க போகிறேன் என்று சொன்ன முதல்வர், உண்மையில் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யவே கரூர் சென்றிருக்கிறார். மேலும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்று அள்ளி தந்த கவர்ச்சி வாக்குறுதிகளை மீண்டும் ஒருமுறை வாக்குறுதியாக கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, மீண்டும், மீண்டும் தனது தவறை உணராமல் காவல்துறை மீது பழி போடுவது, பஞ்ச் டயலாக் அடிப்பது, "தில் இருக்கா, திராணி இருக்கா, ஒரு ****** உம் கிடையாது" என்று அநாகரீகமாக பேசுவது போன்ற தனது Trademark பேச்சுக்களையும் வெளிப்படுத்தியுள்ளார் முதல்வர்.
நான் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் என்று சொல்லும் முதல்வருக்கு, தன்னை பார்க்க வந்து இறந்தவர்களுக்கோ அவரது குடும்பத்தாருக்கோ பொதுவெளியில் ஒரு மன்னிப்பு கேட்க கூட மனது வருவதில்லை. மாறாக, தங்களை நம்பி மாற்றத்திற்கான அரசியலை நோக்கி வரும் மக்களை உசுப்பேத்தி ரசிக மனநிலையிலேயே வைத்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். மேலும், தீர்ந்து போன சக்தியில் இருந்து குதிரை பேரத்தில் ஆள் பிடிக்கும் முதல்வர் அவர்களே, Party Fund பற்றி பேசினால் திமுக ஓடுவது உண்மைதான். ஆனால், உங்கள் Party யினர் செய்யும் முறைகேடுகள் நாளொறு வண்ணம் செய்திகளில் வருவதை நீங்கள் பார்ப்பதில்லையோ!? முடிந்தால் பாருங்கள்.. நடிகரை பார்க்க வந்து இறந்தவர்களுக்கு நினைவு மண்டபம், உறவினர்களுக்கு அரசு வேலை. What bro, it's very wrong bro!!#(ஏ)மாற்றம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

