"தவெகவிற்கு போடும் ஓட்டு வேஸ்ட்! விஜய் தொண்டர்களை அதிமுகவுக்கு ஓட்டு போட சொல்ல வேண்டும்"- ஜெயக்குமார்
Apr 14, 2026, 15:49 IST1776161954070
தவெகவிற்கு போடும் ஓட்டு வேஸ்ட் என அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை ராயபுரம் பகுதியில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, அதிமுக முன்னாள் அமைச்சரும் இராயபுரம் தொகுதி வேட்பாளருமான டி.ஜெயக்குமார், அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ராயபுரம் பகுதியில், சாலைகள் எல்லாம் குண்டு குழுயுமாக செவ்வாய் கிரகமாக இருக்கிறது. அதனை பூமியாக மாற்றுவது முதல் இலக்கு என தெரிவித்தார். அதேபோல், போதை பொருள் இல்லாத தொகுதியாக மாற்றுவேன் என்றும் கூறினார். மேலும் திமுக தோல்வி பயத்தில் கூப்பனுடன் 8 ஆயிரம் ரூபாய் கூப்பனுடன். 2 ஆயிரம் ரூபாயை வாக்காளர்களுக்கு வழங்கி வருகிறது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து தனிபட்ட முறையில் பேசுவதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் திருப்பி விமர்சனம் செய்தால் ஸ்மால் பாய், சாக்கலேட் பாய் தாங்க மாட்டார், எங்களுக்கும் ஐடி விங்க் உள்ளது என்றார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்கள் தெளிவாக உள்ளார்கள். தவெகவிற்கு ஓட்டு போட்டு வாக்குகளை வீணடிக்க மாட்டார்கள். ஆளும் கட்சிக்கு மாற்றாக அதிமுகவிற்குத்தான் வாக்களிப்பார்கள். தவெகவுக்கு போடும் ஓட்டு வேஸ்ட். தவெக தலைவர் விஜய் திமுக வரக்கூடாது என்று கூறுகிறார். அப்படி என்றால் உங்கள் கட்சிக்காரரிடம் கூறி அதிமுகவுக்கு ஓட்டு போட சொல்லுங்கள். ஒரு சில ஓட்டு எடுப்பீங்க சீட்டு எடுக்க முடியாது. அதனால் அந்த ஓட்டு வேஸ்ட் அதனால் யாருக்கு என்ன பலன்? விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.