எங்கள் கூட்டணிக்கு வந்தால் விஜய்க்கு லாபம், வராவிட்டால் இழப்பு - ஜெயக்குமார்

 
ச்

விஜய் அண்ணா திமுக தலைமை ஏற்று வந்தால் gainer. வரவில்லை என்றால் Losser என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து கூறியுள்ளார்.

jayakumar

அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை பாரபட்சம் இல்லாமல் அகற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். எங்கள் தலைவர்களின் படங்கள் இருந்தால் அவற்றை முழுமையாக அகற்றுவார்கள். ஆளும் கட்சி தலைவர்களின் படம் இருந்தால் அவற்றை பேப்பர் ஒட்டி மறைப்பார்கள். அவ்வளவு சின்சியரான சேவகர்கள். இந்த சின்சியரான சேவகர்கள்  யார் என்பதை கண்டறிந்து மே மாதம் அவர்களுக்கு உண்டான பரிசை நாங்கள் அளிப்போம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். தேர்தல் ஆணையம் சொல்வதை பாரபட்சம் இல்லாமல் இந்த சின்சியரான சேவகர்கள் செயல்படுத்த வேண்டும். விஜயுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று எங்களின் பொதுச் செயலாளர் பலமுறை கூறிவிட்டார். விஜய் அண்ணா திமுக தலைமை ஏற்று வந்தால் gainer. வரவில்லை என்றால் Losser” என்றார்.