"ஓபிஎஸ், டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்ப்பது குறித்து ஈபிஎஸ் முடிவு செய்வார்"- ஜெயக்குமார்

 
jayakumar jayakumar

ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து ஈபிஎஸ் தான் முடிவு செய்வார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் இணைப்பு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “Lets wait and see... ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து ஈபிஎஸ் தான் முடிவு செய்வார். அதிமுகவில் இணைய சாத்தியமில்லை என தெரிவித்த ஓபிஎஸ்ஸின் கருத்துக்கு இபிஎஸ் விரைவில் பதில் கொடுப்பார். டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்ப்பது குறித்து இபிஎஸ் முடிவு செய்வார். ஓபிஎஸ், டிடிவி தினகரனை அதிமுகவில் இணைப்பது குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. எங்கள் மீது விமர்சனங்கள் கடுமையாக இல்லாதபட்சத்தில் நான் பதில் விமர்சனம் செய்வது சரியல்ல. பழையபடியே 100 நாள் வேலைத்திட்டம் இருக்க வேண்டும். திரைப்படத்தில் நடித்து உழைத்துச் சம்பாதித்த பணத்தை ஏழை, எளிய மக்களுக்காகவே அர்ப்பணித்தவர்” என்றார்.