“அப்டேட் இல்லாத உதயநிதி” - ஜெயக்குமார் விமர்சனம்

 
jayakumar jayakumar

ஆடிய ஆட்டமென்ன? ... பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வமென்ன? அந்த பாட்டு திமுகவிற்கு பொருந்தும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

jayakumar

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அதிமுகவை பற்றி பேச திமுகவினருக்கு தகுதி இல்லை. திமுகவினர் 3 மாதத்திற்கு பிறகு கம்பெனியை மூடிவிட்டு சென்றுவிடுவார்கள். ஆடிய ஆட்டமென்ன? ... பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வமென்ன? அந்த பாட்டு திமுகவிற்கு பொருந்தும். ராயபுரம் தொகுதி மக்களை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன், மீண்டும் ராயபுரத்தில்தான் போட்டியிடுவேன். 25 ஆண்டுகள் எனக்கு வெற்றியைக் கொடுத்த ராயபுரம் மக்களை விட்டுவிட்டு வேறு தொகுதிக்கு மாற மாட்டேன். ஒரு மாவீரனுக்கு... விளையாட்டு வீரனுக்கு வெற்றி, தோல்வி பற்றி கவலை. எந்த ஊரும் கிடையாது ஒரே ஊர் தான் ராயபுரம்.வேகமாக சென்று கொண்டிருக்கின்ற அதிமுக இயக்கத்தை, அப்டேட் இல்லாத உதயநிதி சொல்வது தன்னைத் தானே கேவலப் படுத்திக் கொள்ளக்கூடிய விஷயம். திமுக தலைவர் ஸ்டாலினை வழி நடத்துவது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தான். அதிமுக புல்லட் ரயில் அதுக்கு இன்ஜினே தேவையில்லை.

கட்சிகளின் பலத்தை பொறுத்து எத்தனை தொகுதிகள் வழங்குவது என கட்சி தலைமை முடிவு செய்யும்.  கட்சி மாறி சென்ற அமைச்சர் ரகுபதி அதிமுக குறித்து பேச தகுதியில்லாவர்.  திமுக ஆடிய ஆட்டத்துக்கு 3 மாதங்கள் கழித்து பதில் கிடைக்கும்” என்றார்.