“2026-இல் தவெக ஆட்சி அமைக்கும் என விஜய் பகல் கனவு காண்கிறார்; அது பலிக்காது”- ஜெயக்குமார்

 
jayakumar

விஜய், எம்ஜிஆர் ஆக முடியாது... அவரது பகல் கனவு பலிக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

jayakumar

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் ஜெயலலிதா பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக பகுதி செயலாளர் அப்பு (எ) வெங்கடேசன் ஏற்பாட்டில்  நடைபெற்றது, இதில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்துக்கொண்டு பேசினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “பிரசாந்த் கிஷோர் அதிமுக-பாஜக ஒன்றாக தேர்தலில் போட்டியிட்டால் த.வெ.க விஜய் கட்சிக்கு நல்ல எதிர்காலம் அமையும் என கூறுகிறார். 
புதுசா கட்சி ஆரம்பித்தவர்கள் அவர்களின் கட்சியினரை ஊக்குவிற்க எதாவது சொல்வது வழக்கம் தான் அப்படிதான் பிரசாந்த் கிஷோர் சொல்லியிருப்பார், அவரை சொல்லாதே என சொல்ல முடியாது. ஆனால் அதிமுக தான் தற்போது பிரதான எதிர்க்கட்சி. தேர்தல் அறிவிக்க இன்னும் 10 மாதம் இருக்கிறது வைட் அண்ட் சி. 2026-இல் தவெக ஆட்சி அமைக்கும் என விஜய் பகல் கனவு காண்கிறார். கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தவே விஜய் அவ்வாறு பேசியிருக்கிறார். எம்.ஜி.ஆர் உடன் யாரையும் ஒப்பிட முடியாது. விஜய் என்றைக்கும் எம்ஜிஆர் ஆக முடியாது என்றார்.