விஜய் எங்களுக்கு எதிரி கிடையாது- ஜெயக்குமார்

 
jayakumar

விஜய்யுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு அவர் ஒன்றும் எங்களுக்கு எதிரி இல்லையே என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

jayakumar

சென்னையில் பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “விஜய் ஒன்றும் எங்களுக்கு எதிரி கிடையாது. எம்ஜிஆர் தவிர்க்க முடியாத சக்தி. அவரது வேலையை அவர் பார்க்கிறார். எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம். சீமானாக இருந்தாலும் யாராக இருந்தாலும், பெரியாரை சிறுமைப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் தமிழ்ந்டு அரசியலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். டாவோஸ் மாநாட்டில் இந்தியா முழுவதும் ரூ.20 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட வரவில்லை.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் தமிழகம் தலைகுனிவை சந்தித்துள்ளது. ஸ்டாலின் எங்களைப் பற்றி கொத்தடிமை என்கிறார். உண்மையில் கொத்தடிமைகளின் ஒட்டுமொத்த உருவமே திமுகதான்.  குடியரசு தினத்தன்று கூட 30 தமிழக மீனவர்கள் சிறைபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அதற்காக ஸ்டாலின் என்ன செய்தார்? அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலம் ஆரம்பித்ததில் இருந்து 10 மாதங்களாக அமைதியாக இருந்தது யார்? போராடிய 5,000 பேர் மீது வழக்குத் தொடுத்தது யார்? அத்தனையையும் செய்துவிட்டு பாராட்டு விழாவில் கலந்துகொள்ள ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்பதே எங்கள் அரசியல் நிலைப்பாடு” என்றார்.