“குருமூர்த்தி வாயை மூடிட்டு இருப்பது நல்லது...இல்லன்னா நல்லா வாங்கி கட்டிப்பாரு”- ஜெயக்குமார்

 
jayakumar

அதிமுக-பாஜக கூட்டணி கிடையாது என்று கட்சி உறுதியான முடிவு எடுத்த பிறகும் ஆடிட்டர்  குருமூர்த்தி தேவையில்லாமல் பேசினால் வாங்கி கட்டிக் கொள்வார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

jayakumar

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 108 ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது.விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் 108 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகளுக்கு ஊட்டி விட்டதோடு தொண்டர்களுக்கு இனிப்புகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பாஜகவினர் எம்ஜிஆரை இன்று புகழ்ந்துள்ளனர். எல்லா தரப்பட்ட மக்களும் போற்றக்கூடிய தலைவராக எம்.ஜி.ஆர். இருந்தார். ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிப்பு அதிமுகவின் முடிவு.ஆடிட்டர் குருமூர்த்தி ஏற்கனவே என்கிட்ட பல தடவை வாங்கிக் கட்டிக் கொண்டு இருக்கிறார். குருமூர்த்தி வாயை அடக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பாஜகவுடன் கூட்டணி இலை என்பது கட்சியால் எடுக்கப்பட்ட முடிவு. சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதும் கட்சி முடிவெடுத்து தான். குருமூர்த்தி இத்துடன் வாய் மூடி கொண்டிருக்க வேண்டும்,இல்லையென்றால் வாங்கி கட்டிக்கொள்வார்.

jayakumar

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வந்த இன்பநிதிக்கு சால்வை அணிவித்தது ஏன்? குடும்ப ஆட்சியினால் அதிகாரிகளுக்கு மரியாதையே இல்லை. எல்லாம் அவர்கள் சொல்வதுதான். அமைச்சர் பணி என்னவென தெரியாதவர் தமிழகத்தில் அமைச்சர் பதவியில் இருப்பது வேதனையாக உள்ளது. திமுக ஆட்சியில் மக்களைபோல் திமுகவினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்பநிதியின் நண்பர்களுக்காக ஒரு மாவட்ட ஆட்சியர் நிற்க வைக்கப்பட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலால் தமிழ்நாட்டில் எந்த ஒரு மாற்றமும் நிகழப் போவதில்லை.  இடைத்தேர்தலை புறக்கணிப்பது அதிமுகவின் தனிப்பட்ட முடிவு” என்றார்.