"பணத்தை கொடுத்து கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை"- ஜெயக்குமார்

 
jayakumar

பணத்தை கொடுத்து கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பதிலளித்துள்ளார்.

jayakumar

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “உலகம் முழுவதும் பேசப்பட்ட, அனைத்து தரப்பட்டமக்களால் ஏற்றுக்கொண்ட தலைவி ஜெயலலிதா. பல்வேறு திட்டங்களை படைத்து அனைத்து தரப்பட்ட மக்களிடமும் அன்பாக தனது வாழ்நாளில் அனைத்து மக்களும் போற்றப்படக்கூடிய முதலமைச்சராக இருந்த புரட்சி தலைவி  ஜெயலலிதா அவர்கள் டிசம்பர் 5 மறைந்தது தமிழர்களுக்கு பேரிடியாக அமைந்தது. அவரது நினைவு நாள் டிசம்பர் 5ஆம் தேதி உள்ள நிலையில் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜெயலலிதா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தக் கூடிய வகையில் வருகின்ற 5 ஆம் தேதி  ஜெயலலிதா நினைவிடத்திற்கு நினைவஞ்சலி புகழஞ்சலி செலுத்த உள்ளோம். காலை 9.30  மணி அளவில் இருந்து 11 மணி வரை நடைபெற உள்ளது.

இதற்கு அனுமதியும் பாதுகாப்பு உள்ளிட்ட சட்ட ரீதியான அனுமதி வழங்க கோரி மனு அளித்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.  டிசம்பர் 5 ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை உறுதிமொழி உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு வழங்க வேண்டி மனு கொடுத்துள்ளோம்.  பணத்தை கொடுத்து கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை,  அதிமுகவை தேடி தான் கூட்டணிக்கு வருவார்கள், ஜெயிக்கும் குதிரையில் தான் பந்தயம் கட்டுவார்கள்” என தெரிவித்தார்.