"நாங்க தான் பாஜகவுக்கு கெட் அவுட் சொல்லிட்டோமே"- ஜெயக்குமார்

 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி. வேலுமணி கூறியது கட்சியின் கருத்து அல்ல - ஜெயக்குமார் பேட்டி

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு இருந்தால் 35 இடங்கள் வென்றிருக்கலாம் என எஸ்.பி வேலுமணி கூறியது அனுமானத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டது. அதற்கு பதில் சொல்ல முடியாது. அவர் பேசியது அவருடைய நிலைபாடு. அதற்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதே அதிமுக நிலைப்பாடு. இலையும் தண்ணீரும் ஒட்டுமா எங்கேயாவது? தமிழ்நாட்டில் இனிமேல் இலையும், தண்ணீரும் ஒட்டாது. நாங்க தான் Get OUT சொல்லிட்டோமே. கெட் அவுட் என பாஜகவை நாங்கள் தான் வெளியேற்றினோம்.  தோற்றுக்கொணடே  இருக்கும் பெங்களூரு அணிபோலதான்  தமிழ்நாட்டில் பாஜக. இது திராவிட மண் பாஜவுக்கு இடம் கிடையாது. இங்கு அதிமுக, திமுகவுக்குதான் இடமிருக்கிறது. பாஜக எக்காலத்திலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது. பாஜகதான் ஆர்சிபி! நாங்கள் சிஎஸ்கே. தமிழ்நாட்டில் பாஜகவும் RCB மாதிரி தோத்துகிட்டேதான் இருக்கிறது. அண்ணாமலை புள்ளிராஜா ஆகிவிட்டார்” என்றார்.