திமுகதான் பாஜகவோடு பேச்சு நடத்துகிறது- ஜெயக்குமார்

 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவுக்கும் ஓபிஎஸ்க்கும் இனி எந்த காலத்திலும் தொடர்பில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக மாநாட்டை தடுக்க முதல்வர் சதி- ஜெயக்குமார்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ரோம் நகர் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னன் போல் இருக்கிறார் ரோபோ மன்னன் ஸ்டாலின். சட்டம், ஒழுங்கை சீரழித்துவிட்டு தமிழ்நாடு உரிமை மீட்பு மாநாடு நடத்துவதா? அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது பன்னீர்செல்வத்துக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த மரண அடி. அதிமுகவுக்கும் ஓபிஎஸ்க்கும் இனி எந்த காலத்திலும் தொடர்பில்லை. அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கி ஆவணங்களை எடுத்து சென்ற துரோகி ஓபிஎஸ். அதிமுக வளர்ச்சியில் பொறுத்துக் கொள்ள முடியாமல் அதனை எந்த வகையிலாவது குழப்பத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என வக்கிர புத்தியோடு பல்வேறு முறை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு ‘குட்டு’ வாங்கிய ஓபிஎஸ்க்கு உச்சநீதிமன்றம் கொடுத்தது மரண அடி. 

திமுகதான் பாஜகவோடு ரகசிய பேச்சு நடத்துகிறது. இனி ஓபிஎஸ் அதிமுகவின் அடையாளம் கொண்ட உடையை உடுத்த முடியாது. இரட்டை இலை சின்னம் கொண்ட லெட்டர் பேடை பயன்படுத்த முடியாது. அதிமுக எனும் துரோகி திமுகவின் பிடீம், சந்தர்ப்பவாதிதான் ஓபிஎஸ். அவருக்கு உச்சநீதிமன்றம் சரியான பாடம் புகட்டியுள்ளது” என்றார்.