அண்ணாமலை பெயரிலே அண்ணாவை வைத்து ஏன் இப்படி? கொந்தளித்த ஜெயக்குமார்

 
jayakumar

அண்ணாமலை தன் பெயரிலேயே அண்ணாவை வைத்துகொண்டு பேரறிஞர் அண்ணாவை விமர்சனம் செய்ய கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அம்மாவை பத்தி பேசும் போதே வாங்கிக்கட்டிக்கிட்டாரு… பெயரிலே அண்ணாவை வைத்து ஏன் இப்படி : கொந்தளித்த ஜெயக்குமார்!! - Update News 360

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அண்ணாமலை தன் பெயரிலேயே அண்ணாவை வைத்துகொண்டு பேரறிஞர் அண்ணாவை விமர்சனம் செய்ய கூடாது. நீங்கள் உங்களை முன்னிலைப்படுத்த எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள் எதற்காக பேரறிஞர் அண்ணாவை சிறுமைப்படுத்தி பேச வேண்டும்? ஏற்கனவே ஜெயலலிதாவை பற்றி பேசி வாங்கிக் கொண்ட அண்ணாமலை தற்போது அண்ணாவைப் பற்றி பேசியிருக்கிறார். மறைந்த தலைவர்கள் மீது விமர்சனங்கள் வைத்தால் எதிர் கருத்து தெரிவிக்கப்படும். தமிழ் வரலாறு தெரியாமல் பேசக்கூடாது, கட்சியை வளர்க்க வேண்டும் என்றால் வேறு ஏதாவது பேசிக் கொள்ளுங்கள்.

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் திமுகவினர் குளறுபடி செய்துள்ளானர். ஏழை, எளிய மகளிருக்கு வழங்காமல் திமுகவினருக்கு வேண்டியவர்களுக்கே ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்தாலும், தமிழகத்தில் அதிமுகதான் தலைமை ஏற்கும். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்” என்றார்.