"தடியடி நடத்திய ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு நாயகனா?"- ஜெயக்குமார்

 
jayakumar

ஜல்லிக்கட்டு போட்டிக்கு சட்ட பாதுகாப்பு அளித்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

jayakumar

கள்ளச்சாராய மரணங்கள், சட்டம், ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக அதிமுக சார்பில் வரும் 22 ஆம் தேதி பேரணி நடைபெறவுள்ளது.  அந்த பேரணிக்கு அனுமதி கோரி காவல் ஆணையரை சந்தித்து ஜெயக்குமார் மனு அளித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டில் தமிழகத்தில் கள்ளச்சாராய பலி, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காரில் வந்து சங்கிலி பறிக்கும் நிலைக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சென்றுவிட்டது.

தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழவில்லை, அமளிப்பூங்காவாக உள்ளது. ஊராட்சி செயலாளர்கள் கொத்தடிமைகளாக இருக்க வேண்டுமென திமுக அரசு நினைக்கிறது. தவறுகளை மூடி மறைக்கவே கள்ளச்சாராயத்தால் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் திமுக அரசு வழங்கியுள்ளது. கள்ளச்சாராய குற்றவாளி மருவூர் ராஜாவுக்கு திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேக் ஊட்டி விடுகிறார். சானிடைசர் குடித்து உயிரிழந்தோருக்கும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோருக்கும் வித்தியாசம் தெரியாதவர்தான் செந்தில் பாலாஜி. நாடகத்தில் வரும் சர்வாதிகாரி போலவே மு.க.ஸ்டாலின் காட்சி அளிக்கிறார். கருணாநிதி சம்பாதிக்காததை உதயநிதி சம்பாதித்து விட்டார்.

வஞ்சகன் தினகரனோடு சேர்ந்து பாழாய் போய்விட்டார் OPS : ஜெயக்குமார் காட்டம் -  தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காவல்துறையை ஏவி தடியடி நடத்தியவர் ஓபிஎஸ்.  ண்மையை மறைக்க தனக்கு தானே ஜல்லிக்கட்டு நாயகன் எனக் கூறுகிறார்.  அதிமுகவின் தொடர் சட்டப்போராட்டத்தால் ஜல்லிக்கட்டு தீர்ப்பு வந்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு சட்ட பாதுகாப்பு அளித்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுதான்” என்றார்.