புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கீடு செய்வது அவசியம் - ஜெயக்குமார்

 
jayakumar

புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கீடு செய்வது அவசியம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

jayakumar

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் பற்றிய கணக்கெடுப்பு அவசியம். புள்ளி விவரங்களை எடுத்து, புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடப்பதாக வதந்தி பரப்புவது தவறானது. வதந்தி பரப்புவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பீகாரில் இருந்து அம்மாநில அதிகாரிகள் குழு இங்கு வந்து அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற அச்சம் தரும் சூழ்நிலை எந்த ஒரு குடிமகனுக்கும் வரக்கூடாது. 

ஊழல் செய்வதற்கு அறை எடுத்து யோசிப்பது திமுக தான். அன்று கலைஞர் செய்தார். இன்று அவர் வழியில் மகன் ஸ்டாலின் செய்கிறார்.  சென்னை மாநகரில் ஆயிரம் தனியார் பேருந்துகளை தனியார் மூலம் இயக்க தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. இது ஊழலுக்கு வழிவகுக்கும். சென்னை மாநகர பேருந்துகளைத் தனியாரிடம் வாங்கி ஊழல் செய்ய முயற்சிக்கின்றனர். அதிமுக மீது இருந்த பயத்தினால், அடிமட்டம் வரையிலும் உள்ளாடைகளை துவைக்கும் பணியில் இறங்கி வேலை செய்து ஈரோடு தொகுதியை திமுக வென்றிருக்கிறது” எனக் குற்றஞ்சாட்டினார்.