4 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் செய்த சாதனை என்ன..? உதயநிதியுடன் விவாதிக்க நான் தயார்- ஜெயக்குமார்

 
ஜெயக்குமார் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டு மக்கள் இருமொழிக் கொள்கையை மட்டுமே கடைபிடிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

கருணாநிதி திமுக பிரசாந்த் கிஷோர் திமுக ஆகிவிட்டது"- அமைச்சர் ஜெயக்குமார்  பேட்டி! | nakkheeran


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77வது பிறந்த நாளை ஒட்டி சென்னை மயிலாப்பூரில் கிரிக்கெட் விளையாட்டு போட்டியை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “திமுக-பாஜக இடையே Understanding இருப்பதால் மக்கள் பிரச்சினையை பற்றி பேசுவதில்லை முதல்வரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் மாறி மாறி பாராட்டிக் கொள்வதிலேயே கவனமாக உள்ளனர். மீனவர்கள் கைதுக்கு கடிதம் எழுதுவதை தவிர முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார்? உதயநிதியின் ரசிகர் மன்றத் தலைவராக இருக்கவே அன்பில் மகேஷ் தகுதியானவர். பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்க அவருக்கு தகுதி இல்லை. 


4 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் செய்த சாதனை என்ன..? உதயநிதியுடன் விவாதிக்க நான் தயார். விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்ற பிம்பத்தை திமுக ஏற்படுத்துகிறது. விளையாட்டு வீரர்களுக்கு எவ்வித சலுகைகளையோ, திட்டங்களையோ திமுக அரசு நடைமுறைப்படுத்தவில்லை.  திமுக அரசுக்கு எதிராக பேசுவோரை கைது செய்வதும், அடக்கு முறையை கையாள்வது தான் திமுக அரசின் சாதனை. விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு பற்றி திமுக அரசு வாய் திறந்து பேசுவதில்லை. பல லட்சம் காலி பணியிடங்கள் அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் உள்ளது. இதனை நிரப்ப திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை” எனக் குற்றம் சாட்டினார்.