“என்னை வெற்றி பெற வைத்தால் என் சொந்த காசில் அனைவருக்கும் மின் அடுப்பு வழங்குவேன்”- ஜெயக்குமார்

 
ஜெயக்குமார்

ராயபுரம் தொகுதியில் என்னை வெற்றி பெற வைத்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் மின் அடுப்பு வழங்குவேன் என கூடுதல் வாக்குறுதியை வழங்கிய ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயகுமார் இன்று எம். சி. சாலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்று வந்த உடனேயே ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் 10 ஆயிரம் ரூபாயும், ஒரு Fridge மற்றும் மின் அடுப்பு வழங்கப்படும் என உறுதியளித்தார். அதேபோல, ராயபுரம் தொகுதியில் போதை கலாச்சாரம் அதிகமாக உள்ளது. வெற்றி பெற்று வந்ததும் போதை பொருள் புழக்கம் இல்லாத தொகுதியாக மாற்றுவேன். ரவுடிகள் இல்லாமல்,அமைதியான தொகுதியாக மாற்றுவேன். ரவுடிகள் இருந்தால் கைகளை உடைப்பேன். என் பலம் என்ன என்று மக்களுக்கு தெரியும்.  ராயபுரம் தொகுதியில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும் எனவும் மக்களிடம் உறுதியளித்தார். அவர் பேசும் போது பூக்களை தூவி பேசவிடாமல் இருந்த தொண்டர்களிடம் என்ன கொஞ்சம் பேசவிடுங்கனு சொன்ன ஜெயக்குமார். 

அதிமுக தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒரு மின் அடுப்பு வழங்கப்படும் என்ற அறிவுப்பு இல்லையென்றாலும், ராயபுரம் தொகுதியில் வீட்டுக்கு ஒரு மின் அடுப்பு வழங்கப்படும் எனவும் கூடுதல் வாக்குறுதிகளை வழங்கி வாக்கு சேகரித்து வருகிறார்.