“ரீல்ஸை விட்டுவிட்டு ரியாலிட்டிக்கு வாங்க”- ஜெயக்குமார் அட்வைஸ்

 
s

சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

Image

இதுதொடர்பாக ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில், “*சார் நான் ஒரு ஆக்க்ஷன் பண்ணிக்கலாமா!?*  நாளைய தீர்ப்பு தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால் முதல்வரானது வரை திரு.விஜய் அவர்களின் நடிப்பு நன்றாகவே வளர்ந்துள்ளது... வாழ்த்துக்கள்!!  ஆனால், பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டி கதை சொல்வதும் என சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல....

Image

"5 நிமிசம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல" என்று பஞ்ச் அடிக்கும் முதல்வர் அவர்களே, அதையே தான் நாங்களும் சொல்றோம்  மின்வெட்டு, விவசாயிகளின் பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு பற்றியோ அல்லது நீங்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள் பற்றியோ ஒரு 5 நிமிஷமாச்சு பேசுங்க.... Reels அ விட்டுட்டு Reality க்கு வாங்க!!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.