"மாணவர்களை அச்சுறுத்துவது அமைச்சரின் பொறுப்பல்ல"- அதிமுக

 
a

மாணவர்கள் சீராக முடி வெட்டவில்லை என்றால், அவர்களுக்கு “மொட்டை அடியுங்கள்” என்று கூறுவதற்கு சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி  அவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்? என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. 


இதுதொடர்பாக அதிமுக ஐடி விங்,  "மாணவர்கள் சீராக முடி வெட்டவில்லை என்றால், அவர்களுக்கு “மொட்டை அடியுங்கள்” என்று கூறுவதற்கு சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்? சொந்தக் கட்சி நிர்வாகிகளையே தொலைபேசியில் மிரட்டியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது மாணவர்களிடமும் இத்தகைய மிரட்டல் தொனியில் பேசத் தொடங்கிவிட்டாரா?

மாணவர்களின் தன்மானத்தையும் சுயமரியாதையையும் பாதிக்கும் வகையில் பேசுவதற்கு ஓர் அமைச்சருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? மாணவர்களை அச்சுறுத்துவது அமைச்சரின் பொறுப்பல்ல; அவர்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாப்பதே அமைச்சர்களின் கடமை!" எனக் குறிப்பிட்டுள்ளார்.