அண்ணாமலை முதலில் தன் பதவியை காப்பாற்றிக்கொள்ளட்டும்- அதிமுக

 
aNNanamalai eps

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி வேலுமணி ஆகியோர் பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை என அதிமுக தலைமை கடிந்துள்ளது.

Image

எஸ்.பி.வேலுமணிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் உட்கட்சி பிரச்னை இருப்பதுபோல் தெரிகிறது எனக் கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ள அதிமுக ஐ.டி விங், “அஇஅதிமுக குறித்தோ, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குறித்தோ, அண்ணன் எஸ்பி வேலுமணி அவர்கள் குறித்தோ பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை.

தன் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்திகளைப் பார்க்காமல் அதிமுக பற்றி மூக்கு வியர்க்க பேசும் அண்ணாமலை, முதலில் தனது பதவியையும் இருப்பையும் காப்பற்றிக்கொள்ளட்டும்! ஆடு, ஓநாய், நரி என எதுவந்தாலும், எப்படி கொக்கரித்தாலும் அஇஅதிமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளது.