போராட்டங்களுக்கு உங்கள் விஜய் அரசு இவ்வளவு கீழ்த்தரமாக தான் பதில் சொல்லுமா?- அதிமுக

 
eps

ஒரு மருத்துவராக இருக்கும் உங்களால், செவிலியர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாதா? போராட்டங்களுக்கு உங்கள் விஜய் அரசு இவ்வளவு கீழ்த்தரமாக தான் பதில் சொல்லுமா? என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.


இதுதொடர்பாக அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில்,  “அமைச்சர் அருண்ராஜ் அவர்களே… இங்கே போராடிக் கொண்டிருப்பவர்கள் யார் தெரியுமா? கொரோனா காலத்தில் நீங்கள் IRS அதிகாரியாக சொகுசாக இருந்த போது, தங்கள் உயிரை துச்சமாக எண்ணி களத்தில் நின்று மக்களைக் காப்பாற்றிய செவிலியர்கள்.  அவர்கள் போராட்டத்தை கூட மதிக்காமல், மின்சாரத்தை துண்டித்து, மிரட்டல் விடுப்பதாக செவிலியர்கள் உங்கள் அரசை நோக்கி குற்றம் சாட்டுகிறார்கள். மேலும், போராடும் செவிலியர்களை மண்டபத்தில் அடைத்து வைத்து , கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசு தயாராகி வருவதாக செய்திகள் வருகின்றன.

ஒரு மருத்துவராக இருக்கும் உங்களால், செவிலியர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாதா? போராட்டங்களுக்கு உங்கள் விஜய் அரசு இவ்வளவு கீழ்த்தரமாக தான் பதில் சொல்லுமா?அண்ணாதிமுக விவகாரம் என்றால் வாய் கிழிய பேசும் நீங்கள், எங்கள் பொதுக்குழுவுக்கு பாஸ் கிடைக்குமா என்று Black Ticket வாங்குவது போல தேடுவதை விட்டுவிட்டு, உங்கள் துறையை கொஞ்சம் பாருங்க சார்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.