மரகதம் குமரவேலின் 4 வருட வருமான வரி கணக்குகள் 4 மாதத்தில் எப்படி குறையும்? - அதிமுக

 
ச்

மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வருமான வரி கணக்கு நான்கு வருட கணக்குகள் நான்கு மாதத்தில் குறையும்? இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் இல்லையா? என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

Image
தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் (Affidavit) வயது மற்றும் வருமான விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்காக கடந்த ஏப்ரலில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் 5 ஆண்டுகளுக்கானவருமானம் ரூ.1.8 கோடி என குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் ரூ.40 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 2023-24 வருமானமும் ரூ.12.57 லட்சத்தில் இருந்து ரூ.4.12 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மரகதம் குமரவேலின் 4 வருட வருமான வரி கணக்குகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், “நான்கே மாதத்தில் குறைந்த மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் அவர்களின் வருமான வரி கணக்கு. அது எப்படி நான்கு வருட கணக்குகள் நான்கு மாதத்தில் குறையும்? இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் இல்லையா? தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.