செந்தில் பாலாஜி அமைச்சராகலாம் என்பது தவறு- அதிமுக வழக்கறிஞர்

 
senthilbalaji

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று காலை நிபந்தனை ஜாமின் வழங்கியது. 

ANI on X: "Point 1, don't want to interfere with AIADMK's internal issues.  Point 2, forthcoming General Body Meeting may go on - no stay. Also,  Division Bench of Madras HC's order

இதனைத் தொடர்ந்து வழக்கு நடைபெற்று வரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் 25 லட்ச ரூபாய்க்கான பிணைத்தொகை மற்றும் இருவர் உத்தரவாதம் சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் பினையாணை புழல் மத்திய சிறைக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து புழல் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், ஆளுயர மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பளித்தனர். இதனிடையே செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கபடலாம் என தகவல் கசிந்துள்ளது. 


இந்நிலையில் இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தனது ட்விட்டர் பக்கத்தில், “உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு விதித்த நிபந்தனைகள் போல செந்தில் பாலாஜிக்கு விதிக்கவில்லை.எனவே அமைச்சராகலாம் என்பது தவறு! கெஜ்ரிவால் அரசு பதவியில் இருந்ததால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பாலாஜிக்கும் பொருந்தும்.செந்தில் பாலாஜி அரசு பதவியில் இல்லாததால் அந்த நிபந்தனைகளை விதிக்கவில்லை!” எனக் குறிப்பிட்டுள்ளார்.