பாஜக- அதிமுக கூட்டணி மீண்டும் உருவாக வாய்ப்பு?- ஜி.கே. வாசன்

 
GKvasan

பாஜக- அதிமுக கூட்டணியில் சலசலப்பு, கருத்து வேறுபாடு சகஜம் என என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

பணம் இல்லை...! மனம் இருக்கிறது...! - ஜி.கே.வாசன் | gk vasan No money There  is a mind


ஈரோடு திண்டல் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் G.K.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமாக தேர்தல் கூட்டணி குறித்து சரியான காலத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கும். கூட்டணி பேச்சுவார்த்தைக்காக ஒவ்வொரு கட்சியும் குழு அமைத்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு கட்சியும் எதிரியை வீழ்த்த இறுதி நேரத்தில் உரிய முடிவு எடுப்பர். தற்போது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மூலம் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.

அதிமுக-பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, இந்திய அளவில் பாஜக பிரகாசமாக செயல்பட்டு கொண்டுள்ளது.  பாஜக.வின் கூட்டணி குறித்து மத்தியில் உள்ள தலைவர்கள் தான் முடிவு செய்வர். ஒவ்வொரு கூட்டணியிலும் கட்சிகளுக்கிடையே சலசலப்பு, கருத்து வேறுபாடு இருப்பது சகஜம். அதனால் பாஜக- அதிமுக கூட்டணி மீண்டும் உருவாக வாய்ப்புள்ளதாக பதிலளித்தார்.