புதுச்சேரி ரிசார்ட்டில் வைத்து திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க போகிறோம் என்று இபிஎஸ் சொன்னார்- சத்யபாமா
தாராபுரம் அ.தி.மு.க எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து த.வெ.கவில் இணைந்தார் சத்யபாமா.

பனையூரில் நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்யபாமா, “யாரெல்லாம் அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்தார்களோ அவர்கள் அனைவரையும் விஜய் அழைத்து சந்தித்தார். மக்களுக்காக பணியாற்ற எங்கள் ஒத்துழைப்பு இருக்கும் என சொல்லியிருக்கிறோம். அதிமுகவில் இருந்து மட்டுமே தவெகவிற்கு நிறைய பேர் வருகின்றனர். அதற்கு காரணம் அங்கு தலைமை சரியில்லை. உட்கட்சி பூசல் நடக்கிறது. நாங்கள் ஏன் அதிமுகவில் இணைந்தோம் என்பது மக்களுக்கு புரிய வைப்போம். அவர்களும் எங்களை விரும்புகிறார்கள். மக்களுக்கு சேவை செய்யவே அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தோம்.
புதுச்சேரி ரிசார்ட்டில் வைத்து இ.பி.எஸ் அவர்கள் தி.மு.க -வுடன் இணைந்து ஆட்சி அமைக்க போகிறோம் என்று சொன்னார். நான் தான் முதல்வர் என்று இ.பி.எஸ் சொன்னார். அப்படி சொல்லும்போது எங்களுக்கு மனநிலை ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. ஏனெனில் நாங்கள் திமுகவால் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறோம். இடையூறுகளை சந்தித்துள்ளேன். உண்மையாகவே தி.மு.க - அ.தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் நான் அ.தி.மு.கவில் தான் இருந்திருப்பேன்” என்றார்.

