ஒரு நடிகர் தமிழகத்தில் முதல்வர் ஆவதற்கு வாய்ப்பில்லை- முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி

 
தவெக முதல் மாநாடு எப்போ..? கொள்கை , செயல் திட்டம் என்ன? கொடிக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யம் - விஜய் தகவல்.. 

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கலந்து கொண்டார். 

நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு வாக்குரிமை இல்லை என சொல்ல நீதிபதிகளுக்கு என்ன  அதிகாரம்? - தளவாய் சுந்தரம் | admk leader thalavai sundaram blames judges -  Tamil Oneindia

தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய தளவாய் சுந்தரம், “அதிமுக ஒன்றாக தான் உள்ளது பிரிவினை ஏதும் இல்லையே. திருமாவளன் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு பொறுத்தவரையில் முதலில் அனைத்து கட்சிகளும் அழைப்பு என்றார். ஆனால் தொடர்ந்து ஆளுங்கட்சி சார்பில் அவர் இருக்கிறார். அவர் நடத்துகின்ற மாநாடு வரவேற்கதக்கது தான், ஆனால் திருமாவளவன் ஏற்கனவே நான் இந்த மாநாடு நடத்துவேன். கூட்டணிக்கும் இந்த மாநாட்டிற்க்கும் சம்பந்தம் இல்லை என தெளிவாக கூறிவிட்டார். கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என அவர் தெளிவாக கூறிவிட்ட பிறகு அதைப் பற்றி ஏன் பேச வேண்டும்?

நடிகர் விஜய் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததை பொறுத்தவரையில் புதிதாக அரசியல் கட்சி இயக்கங்கள் நடத்துபவர்கள் பெரிய தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவது வாடிக்கைதான். அவர் தேசிய நீரோட்டத்தில் செல்வாரா  அல்லது திராவிட அரசியலில் செல்வரா? என்பது குறித்து அவர் அரசியல் கட்சி தொடங்கி அவர் கொள்கைகளை அறிவித்த பிறகு தான் கருத்து கூற முடியும். எம்ஜிஆர் ஜெயலலிதாவும் கடவுள் ஆசி பெற்று முதல்வரானார்கள். ஆனால் இனி ஒரு நடிகர் முதல்வராவதற்கு எனக்கு தெரிந்து வாய்ப்பு இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்துவிட்டது, தற்பொழுது கூட்டணி பற்றி பேசுவதற்கான வாய்ப்பு இல்லை. தேர்தல் நெருங்கும் போது தான் இது சம்பந்தமாக பேச முடியும்” என தெரிவித்தார்