எனக்கு இந்தியா தான் பிடிக்கும்- செல்லூர் ராஜூ

 
செல்லூர் ராஜு

திமுக பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது சமதர்மம் கூட்டணி, இல்லாத போது சனாதனமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார். 

sellur

சென்னையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “கருணாநிதி வழியில் ஒரே நாடு, ஒரே தேர்தலை நாங்களும் வரவேற்கிறோம்.  1971 ஆம் ஆண்டுகருணாநிதியே ஒரே நாடு ஒரே தேர்தலை வரவேற்றிருக்கிறார். வீண் செலவு, அரசு பணியாளர்களுக்கு சுமை ஆகியவற்றை குறைக்க வேண்டுமென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவர வேண்டுமென அன்றே கருணாநிதி சொன்னார்.

திமுக பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது சமதர்மம் கூட்டணி, இல்லாத போது சனாதனமா? தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. எனக்கு இந்தியா தான் பிடிக்கும் ஆனால் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. மதுரை மாநாட்டுக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. ஆட்சியின் தவறுகளை மறைப்பதற்காக சனாதனத்தை திமுக கையில் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி காலில் விழுவது தவறில்லை.” என்றார்.