ரெய்டு தொடர்ந்து நடக்கணும்; கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது - செல்லூர் ராஜூ

 
sellur raju

தல என்றால் தோனி தான் தல, தல என கூறிக் கொண்டிருப்பவர்கள் தல அல்ல என நடிகர் அஜித்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மறைமுகமாக தாக்கி பேசினார்.

Image 

மதுரை மாவட்டம் பரவை பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி தான் வெற்றி பெறும். தல தான் ஜெயிப்பார் தலை என்றால் தோனி தான் தல தல என கூறிக் கொள்பவர்கள் இல்லை. ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ளதால் தான் நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு அவருக்கு அழைப்பு விடுத்திருக்க வாய்ப்பில்லை. பிரதமர் மோடி நமக்கு கிடைத்த பெருமை, அவரை பல நாட்டு பிரதமர்கள் புகழ்கிறார்கள். காலில் விழ வருகிறார்கள்.

திமுக நாடாளுமன்ற திறப்புவிழாவில் பங்கேற்க வேண்டும். இன்றைய ரெய்டுகளை பார்த்து, இங்கு முதலீடு செய்தால் மாட்டிக்கொள்வோமோ என்று அஞ்சி, வெளிநாட்டில் முதலீடு செய்யலாம் என்றே ஸ்டாலின் சென்றுள்ளார். இதை தான் எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த அரசு முழுமையாக விளம்பர அரசு. நமக்கான திட்டங்கள் எதையும் தரமாட்டார்கள். மதுவிலக்கு என்கிற பெயரில் மதுபான விற்பனை நடக்கிறது என்று மக்களே இன்று பேசத் தொடங்கிவிட்டார்கள். சொன்ன எதையுமே திமுக அரசு நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்லவில்லை. முதலீடு செய்வதற்காக சென்றுள்ளார். உலகம் சுற்றும் வாலிபன் பட எம்.ஜி.ஆர். போல விதவிதமான உடைகளை அணிந்து கொண்டு பின்னி எடுக்கிறார். அதைப்பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.

Image

முதல்வர் ஸ்டாலின் இன்ப சுற்றுலா சென்றுள்ளார். முதலீடுகள் ஈர்க்கப்படுவது போல தெரியவில்லை. வித விதமாக அடைகளை அணிந்து, ஜப்பானை சுற்றி வருகிறார். எங்கள் ஆட்சியில் சரியாக திட்டமிட்டு, ஒப்பந்தம் கையொப்பமானது. திமுக என்பதே வன்முறைக் கட்சி. இந்த வருமானவரி சோதனையே காலதாமதமான நடவடிக்கை. முன்கூட்டியே இதை செய்திருந்தால், கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் இறந்திருக்கமாட்டார்கள்” என்றார்.