“நாங்க கூவி கூவி தான் ஓட்டு கேட்டும்... யாரும் போடல”- செல்லூர் ராஜூ

 
sellur raju

குறிப்பிட்ட சமுதாயம் இந்தியாவை ஆள வேண்டும் என்பதற்காக மோடிக்கு வாக்களித்தனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

வழக்குகள் எல்லாம் எனக்கு ஜுஜுபி” - செல்லூர் ராஜு | nakkheeran

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.  9 தொகுதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக,  ஒரு தொகுதியில் நான்காம் இடத்தை அடைந்தது. இதையடுத்து தோல்விக்கான காரணம் குறித்து மக்களவைத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன்  எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார். அப்போது ரூ.8,000 கோடி நலத்திட்டங்கள் செய்தும் மதுரையில் அதிமுக 3-வது இடம் பிடித்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “தென் தமிழகத்தில் குறிப்பிட்ட சில சமூக மக்கள் மோடியே பிரதமராக வேண்டும் என்று விரும்புகின்றனர். குறிப்பிட்ட சமுதாயம் இந்தியாவை ஆள வேண்டும் என்பதற்காக மோடிக்கு வாக்களித்தனர்.ஏம்பா நாங்க என்னா புரட்சித்தலைவரா .. புரட்சித்தலைவியா ...
நாங்களும்  கூவி கூவி தான் ஓட்டு கேட்டும் யாரும்  ஓட்டு போடல.. மதுரை பரவாயில்லை மற்ற ஊரில் டெபாஸிட் போச்சு. சிறுபான்மை மக்கள் அதிமுகவை  நம்பவில்லை. எனக்கே அதிமுக மதுரையில் மூன்றாவது இடமா என அதிர்ச்சியாக தான் இருந்தது. மதுரை அதிமுகவின் கோட்டையாக இருந்தது. ஆனால் தற்போது தோல்வியைத் தழுவியுள்ளது. இது மன உளைச்சலாக உள்ளது” என்றார்.