அதிமுக உங்கள் பாட்டன் வீட்டு சொத்தா? ஓபிஎஸ்-சை விளாசிய முன்னாள் அமைச்சர்!!

 
tn

அதிமுக உங்க பாட்டன் வீட்டு சொத்தா என்று ஓ பன்னீர்செல்வத்திடம் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

op

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொது செயலாளராக கலந்து கொண்டார்.  அதே சமயம் இக்கூட்டத்தை புறக்கணித்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்தில் முகாமிட்டார்.  அச்சமயத்தில்  ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் . இந்த விவகாரத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அடைக்கப்பட்டுள்ளனர் . அத்துடன் ஓபிஎஸ் தரப்பில் இருந்து 200 பேர் மீதும்,  எடப்பாடி பழனிசாமி தரப்பில் 200 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் சட்டம் ஒழுங்கை  கருத்தில் கொண்டு அதிமுக அலுவலகத்திற்கு  வருவாய் துறையினரால்  சீல் வைக்கப்பட்டுள்ளது.

rb udhayakumar
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் ஓ.பன்னீர் செல்வத்தை நோக்கி பல கேள்விகளை எழுப்பி உள்ளார்.  இப்படி இழி செயலில் நீங்கள் ஈடுபடுவீர்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.  அதிமுக என்ன உங்க பாட்டன் வீட்டு சொத்தா அல்லது உங்கள் சொத்தா? புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,  அம்மாவின் ஆன்மா உயிரோடு இருப்பதற்கான சாட்சி தான் நேற்று அரியலூரில் நடந்த விபத்து.  அதிமுக கட்சி அலுவலகத்தில் கதவை எட்டி உதைத்த நபர் விபத்தில் இறந்துள்ளார் என்று கூறியுள்ளார்.