“நன்றி மறந்தவர்களுக்குவிஜய் அல்வா கொடுத்துவிட்டார்”- ஆர்.பி.உதயகுமார்
அதிமுகவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போன்றோர் ராஜாவாக இருந்தார்கள், தவெகவில் விஜய்யின் கூஜாவாக மாறி பரிதாபமாக உள்ளனர் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “அதிமுகவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போன்றோர் ராஜாவாக இருந்தார்கள், தவெகவில் விஜய்யின் கூஜாவாக மாறி பரிதாபமாக உள்ளனர். அதிமுகவில் போர் படைத் தளபதிகளாக இருந்தார்கள். தற்போது தவெகவில் போர் கருவிகளை துடைத்து சுத்தப்படுத்தும் பதவிகளை வாரி வழங்கி இருக்கிறார் முதல்வர் விஜய். நன்றியை மறந்தவர்களுக்கு விஜய் திருநெல்வேலி அல்வா கிண்டி கொடுத்துவிட்டார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் 6வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, முதலமைச்சர் விஜயின் தவெக ஆட்சியில் 17வது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதே வேளையில் புதிய முதலமைச்சர்களை பெற்றுள்ள கேரளா, கர்நாடகா, மேற்குவங்க மாநிலங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளன” என்றார்.

