சந்திரயானைவிட அதிகமாக அதிமுக மாநாடு உலக அளவில் பேசப்படுகிறது- ஆர்.பி. உதயகுமார்

 
udhayakumar

சந்திரயானைவிட அதிகமாக அதிமுக மாநாடு உலக அளவில் பேசப்படுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

 Junior Vikatan - 06 July 2022 - ஒருங்கிணைப்பாளர் ஆவதற்கு, மா.செ-க்களுக்கு  எவ்வளவு கொடுத்தார் ஓ.பி.எஸ்? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி | former minister RB  udhayakumar interview ...

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “திமுக தலைமையிலான அரசு கடன் வாங்குவதில் முதலிடத்தில் உள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் மரணங்களுக்கு திமுக - காங்கிரஸ் கட்சிகளே பொறுப்பு. நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சி செய்யும் சந்திரயான் 3 பற்றி எப்படி உலகமெல்லாம் பேசப்படுகிறதோ, அதைவிட அதிகமாக அதிமுக எழுச்சி மாநாட்டின் வெற்றி குறித்து உலகம் முழுக்க பேசப்படுகிறது. திமுக தலைமையிலான அரசு கடன் வாங்குவதில் முதலிடத்தில் உள்ளது.

அதிமுக எழுச்சி மாநாடு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் இட்டுள்ளது. அதிமுக மாநாட்டில் மக்கள் நலனுக்காக 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான அரசு கடன் வாங்குவதில் முதலிடத்தில் உள்ளது. ராகுல்காந்தி பிரதமர் ஆனவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறுகிறார்கள், ராகுல்காந்தி எப்போது பிரதமர் ஆவது, எப்போது நீட் தேர்வை ரத்து செய்வது? சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன், இது இந்தியாவுக்கு மிகப்பெரிய பெருமையாக அமைந்துள்ளது” எனக் கூறினார்.