அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களால் நிராகரிக்கப்பட்டவர் ஓபிஎஸ்- ஓ.எஸ்.மணியன்

 
os manian

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க, உறுப்பினர் சேர்க்கை முகாம்களை தீவிரப்படுத்தவும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Image

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பது, பூத் கமிட்டி அமைப்பது,  தேர்தலுக்கு முன்பாக கட்சியில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக ஆளுநரை சந்தித்து புகாரளிக்கவும் முடிவு செய்யப்பட்டது. 

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஒ.எஸ்.மணியன், “ஒட்டுமொத்த அதிமுக நிர்வாகிகள் ஒருமனதாக எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டுள்ளனர். ஓபிஎஸ்-ஐ பொறுத்தவரை தொண்டர்களால் நிராகரிக்கப்பட்டவர், நிர்வாகிகளால் ஒதுக்கப்பட்டவர். கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகிகளால் புறக்கணிக்கப்பட்டவர். உள்ளூரில் ஊராட்சி மன்ற பதவியை கூட பிடிக்க முடியாதவர்தான் வைத்திலிங்கம்” என்றார்.