பழனிசாமியிடம் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்- காமராஜ்

 
kamaraj

நெல் மூட்டைகள் மட்டுமல்ல, நாடு முழுவதும் எல்லாமே தேக்கமாக இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். 

 

Tamil News | முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு, அலுவலகத்தில் ரெய்டு | Dinamalar

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு சென்ற அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமானத்தில் வந்த நபர் ஒருவர் விமர்சனம் செய்ததை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியுடன் வருகை தந்தவர்கள் அந்த நபரை தாக்கினர். இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி உட்பட ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மீது போடப்பட்டுள்ள வழக்கை கண்டித்தும் உடனடியாக அந்த வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தலையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். அப்போது எடப்பாடி பழனிச்சாமி மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக் கோரி முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய காமராஜ், “எடப்பாடி பழனிசாமி மீது திமுக அரசு பதற்றத்தில் பொய் வழக்கு போட்டுள்ளது. பொய் வழக்கு தொடர்பாக பழனிசாமியிடம் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட பொய் வழக்கை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். எடப்பாடி பழனிசாமி மீது திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது. நெல் மூட்டைகள் மட்டுமல்ல, நாடு முழுவதும் எல்லாமே தேக்கமாக இருக்கிறது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.